இனிய சொந்தங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் வணக்கங்கள்.
மூத்த, வாரிசுகளற்ற, வருமானமில்லாதர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கும், ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் திட்டத்தின் கீழ், 28.11.2021 அன்று வழங்கவிருந்த நவம்பர் மாத ரேஷன் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், டிசம்பர் மாத ஞாயிற்றுக்கிழமை 05.12.2021 அன்று
செஞ்சி, சக்கராபுரம், ஜினாலயத்தில், ஜினகாஞ்சி ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக மகாசுவாமிகள் ஆசியுடன், ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரகர் இளையவர் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.