இனிய சொந்தங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் வணக்கங்கள்.
மூத்த, வாரிசுகளற்ற, வருமானம் இல்லாதார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கும், ஸ்ரீ ஆதிநாத் சேவா ட்ரஸ்டின் திட்டத்தின் கீழ், 11 ஆண்டுகள் முடிந்து, 12 ஆம் வருடம் ஜூன் மாதம், கடைசி ஞாயிற்றுக் கிழமை 26.06.2022, அன்று, வந்தவாசி, ஜினவாணி திருமண மண்டபத்தில், ஜினகாஞ்சி ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக மகாசுவாமிகள் ஆசியுடன், ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரகர் இளையவர் முன்னிலையில், திரு. குபேந்திர நைனார், (ஆசிரியர் ஓய்வு ), வெண்குன்றம், தலைவர், ஜினவாணி திருமண மண்டபம், வந்தவாசி, அவர்களின் தலைமையில், கலந்து கொண்டோர் அனைவரின் திருக்கரங்களால் காலை சுமார் 10 மணியளவில் விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் நிழல் படங்கள்🙏🙏🙏🙏